Saturday, 23 March 2019

சுட்டு pointing letter


சுட்டு

அ, இ, உ - மூன்று எழுத்துக்களும் மொழியின் முதலில் நின்று சுட்டிக் காட்டும் எழுத்துக்கள்.

அ இ உ அம் மூன்றும் சுட்டு. 
தொல்காப்பியம் - நூல் மரபு - 31

அ - that
இ - this
உ - it

அ -- அவன் -- அவள் -- அவர் (அவர்கள்) -- அது -- அவை
இ -- இவன் -- இவள் -- இவர் -- இது -- இவை
உ -- உவன் -- உவள் -- உவர் -- உது -- உவை

அ -- அந்த, அதனால், அப்படி, அவ்வாறு - முதலானவை சுட்டின் வளர்ச்சி.

கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும் - திருக்குறள் 575 -- அஃது இன்றேல்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - திருக்குறள் 231

க்காண்எம் காதலர் செல்வார் இக்காண்என்
மேனி பசப்(பு)ஊர் வது - திருக்குறள் 1185

அது அன்று - அதாஅன்று - அதான்று - திருமுருகாற்றுப்படை

இவற்றால் நாம் அறிவது என்ன?

து என்பது ஒரு வினைச்சொல். இது தனித்து நின்று பொருள் தர வல்லது. - துக் கொற்றா  = உண் கொற்றா
இப்படி அ என்பது தனித்து நின்று பொருள் தராது.

து வந்தது - து - அஃறிணை, ஒருமை உணர்த்தும் இடைச்சொல்

இந்தத் து என்னும் சொல்லைப் போல் அ - சுட்டைச் சொல் என்று கொள்ள முடியாததால் எழுத்து எனக் கொண்டனர்.

வினா

ஆ, ஏ, ஓ - மூன்றும் மொழியின் ஈற்றில் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்துக்கள். 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி