Saturday, 26 January 2019

அகநானூறு Agananuru 146


  • எருமைக் கடா பெண் எருமையைத் தழுவிக்கொண்டு பகலெல்லாம் பனிமலர்ப் பொய்கையில் கிடந்த பின் படப்பைக்கும் பழன வயலுக்கும் வந்து தங்கும் ஊரினை உடையவன் இந்த ஊரன். 
  • நான் மாயப் பரத்தனாகிய ஊரன் சொன்ன சொற்களை நம்பி ஏமாந்தேன். 
  • என் தாய் என்னைப் பேணி வளர்த்த நலனை விரும்பாமல்  இவனுடன் வந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறேன். 
  • என்னைப் போல் அவனிடம் ஏமாந்தவள் யார்? அவள் இரக்கம் கொள்ளத் தக்கவள். 
  • வாயில் வேண்டி வந்த பாணனிடம் தலைமகள் சொல்கிறாள்.
மருதம்
உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் பாடல்
பாடல் பகுதி
ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,    5
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி