Wednesday, 23 January 2019

அகநானூறு Agananuru 123


  • ஆன்றோர்  வயிறு போல் மெலிந்திருக்கும் மலைப்பாதை 
  • அழிக்கும் யானையால் அழகு இழந்து காணப்படும் குன்றம் 
  • இதன் வழியில் சென்று பொருள் ஈட்டி வரவும் மனம் பாயவில்லை 
  • நெஞ்சே 
  • மனைவி அணைத்துக்கொண்டு கிடந்தால் வறுமை வாட்டுமே என்று அஞ்சுகிறாய் 
  • இப்படி ஒருபக்கமும் சேராமல் அழிதகைமை கொண்டிருக்கிறாய் 
  • சோழர் காவிரி கடலோடு கலக்கும் பெருந்துறையில் இறால் மீனொடு கரையேறும் அலை மகளிர் திளைத்து விளையாடி எறிந்த மாலையோடு திரும்பும். அது போல நீ காதலியுடனும் பொருளுடனும் மோதிக்கொண்டு அலைகிறாய் . 

அவன் நினைவலை

பாலை
காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார் பாடல்

பாடல் பகுதி

மா வண் சோழர்    10
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங் கடல் ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி