Tuesday, 22 January 2019

அகநானூறு Agananuru 106


  • பொரி மிதப்பது போல், மிதந்து மேயும் மீன்களை மேய மீன்கொத்திப் பறவை காத்திருக்கும் துறையை உடையவன் ஊரன் (பரத்தையரை மேய ஊரன் காத்திருக்கிறான் - இறைச்சிப் பொருள்) 
பரத்தை சொல்கிறாள். 
  • "அவன் மனைவி அவனை என்னோடு இணைத்துப் பேசுகிறாளாம். எனக்கும் அவனுக்கும் தொடர்பு இல்லை. என்றாலும் அவளிடம் சென்று அவளை உசுப்பிவிட்டு வலவரலாமே. செல்லலாமா தோழி" 
  • செழியன் போரில் பகைவரை அழிக்கும்போதல்லாம் களிறுகளைப்  பரிசிலாகப் பெறுவதற்காகப் பாணர் தண்ணுமை முழக்குவர். அவர் தண்ணுமை முழக்குவது போல் அவன் மனைவி தன் வயிற்றில் அடித்துக்கொள்ளட்டும்.  

மருதம்
ஆலங்குடி வங்கனார் பாடல்

பாடல் பகுதி

ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்  10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி