Wednesday, 17 October 2018

கடவுள் முதுமரம் Natrinai says 83

எம் ஊரின் வாயிலில்,
உண்ண நீர் எடுக்கும் துறையில்,
கடவுளாகக் கருதி வழிபடும் மரத்தை 
உன் கூரிய நகங்களால் பற்றிச் சிறகுகளை மடக்கி அமர்ந்து வாழ்ந்து பழகிய பழக்கத்தால்
உன் வளைந்த  வாயைப் பிளந்து

கூகையே
வலிமை முந்தும் கூகையே

குழறாதே

ஆட்டுக்கறி போட்டுச் சமைத்த வெண்பொங்கலும்
எலி சுட்ட வறுவலும்
உணக்கு நிறைய படையலாகத் தருகிறேன்

என் காதலர் வரும் நேரம் இது
அவரை எண்ணித் தூங்காமல் நான் வருந்திக்கொண்டிருக்கும் நேரத்தில்
உன் குரலை எழுப்பி, அதற்குப் பயிற்சி தந்துகொண்டிருக்காதே

குறிஞ்சி
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, 
தோழி சொல்லியது.
பெருந்தேவனார் பாடல்


கடவுள் முதுமரம்
கூகை


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி