Tuesday, 16 October 2018

நாணுத் தக்கன்று Natrinai says 72

பேணிக் காக்கவேண்டிய பண்புகளைப் பெரியோர் சில நேரங்களில் பேணிக் காப்பதில்லை
எண்ணிப் பார்க்கும்போது, அது நாணப்பட வேண்டிய ஒன்று அன்று

தோழி
நீ என் உயிர் போன்றவள்
உனக்கு மறைக்க வேண்டியது என்ன இருக்கிறது

இது மிகவும் வருந்தத் தக்க செயல்தான்
உன்னோடு சேர்ந்து நானும் தாய்க்குத்  தெரிந்துவிடுமே என்று அஞ்சுகிறேன்

அவனோ, உன்னை விட்டுப் பிரிய எண்ணவே இல்லை
கானலில் விளையாடும் தோழியர் அலர் தூற்றுவார்களே
அவனோடு உனக்கு உள்ள நட்பின் ஈரம் உலர்ந்துவிடுமோ என அஞ்சுகிறேன்

நெய்தல்
தோழி 
சிறைப்புறமாகத் 
தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.
இளம்போதியார் பாடல்




No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி