Friday, 19 October 2018

கானக் குறவர் மட மகள் Natrinai says 102

செவ்வாய்ப் பசுங்கிளியே
வளைந்த தினைக்கதிர்களைக் கிள்ளிச் சென்ற பசுங்கிளியே

நான் அவரோடு இருந்துகொண்டு நீ கதிரைக் கிள்ளிச் செல்ல உனக்கு உதவினேன்
உன் குறையை முடித்து-வைத்தேன்

இப்போது உன்னை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்

பலாப் பழம் மிக்க அவர் நாட்டுக்கு உன் இனத்துடன் செல்வாயானால்
அந்த மலை கிழவனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்

கானக் குறவன் மகள் தினைப்புனம் காக்க வந்திருக்கிறாள் என்று எடுத்துச் சொல்
குறிஞ்சி
காமம் மிக்க கழிபடர்கிளவி
செம்பியனார் பாடல்

விளைச்சலில் கிளிகள்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி