Monday, 17 September 2018

குயில் எழுத்து Agananuru says 297

பாலை
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் 
தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

நெஞ்சே

அவள் நம்முடன் வருகிறேன் என்றாள்
நாம் விட்டுவிட்டு வந்துவிட்டோம்
மாலையிலும் இரவிலும் நம்மை நினைத்துக் கலங்குவாளே
என்ன ஆவாளோ

எனக்கு அழகில்லாத இளந்தாடி இருக்கிறது 
அது நடுகல்லில் எழுதப்பட்டுள்ள குயில் எழுத்துப் போல் காணப்படுகிறது 
அதனால் வழிப்பறி செய்யும் மறவர் என்னைப் பாராமுகமாக விட்டுவிடுகின்றனர் 

ஓமை மரக் காட்டில் புலால் நாற்றம் வீசுமிடத்தில் பூளாப்பூ போன்ற மயிர் கொண்ட காட்டுப் பூனைக் குட்டிகள் நிலாவைச் சூழ்ந்திருக்கும் விண்மீன்கள் போல, தாயுடன் செல்லும்

சேக்கோள் (ஏறு தழுவல்) பறை முழக்கம் கேட்டு எருவை என்னும் பருந்தினம் பறந்தோடும்

இப்படிப்பட்ட காட்டு வழியில் நம்முடன் அவளும் வருவதாச் சொன்னளே
விட்டுவிட்டு வந்தவிட்டோமே
எப்படிக் கலங்கிக்கொண்டிருப்பாளோ


வெருகு & குட்டிகள்
காட்டுப் பூனை
sand cat 




No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.