Wednesday, 22 August 2018

அசுணம் ஓர்க்கும் Agananuru says 88

குறிஞ்சி
ஈழத்துப் பூதன் தேவனார் பாடல்
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

விளைந்திருக்கும் தினையை உண்ணப் புருவைப் பன்றி வரும் 
பல்லி ஒலி கூட இல்லாமல் பதனமாக இரவில் வரும் 
கானவன் கழுதுப் பந்தலின் மேல் விளக்கு வைத்துக்கொண்டு அதனைக் காவல் புரிவான் 
அந்த நேரத்தில் நம் இல்லத்துக்கு வந்து தனிமையில் வருந்தும் நம் துன்பத்தைப் போக்கினான் 

அவன் நன்னராளன் - நல்லவன் 
அவன் சென்றுவிட்டான் போலும் 

புலியைத் தொலைத்த யானை முகத்தில் ஒழுகும் மதத்தை வண்டு மொய்க்கும் ஒலி கேட்கும் 
மலைக் குகையில் இருக்கும் அசுணம் என்னும் விலங்கு அந்த ஒலியை யாழின் ஒலியோ என்று கேட்டு மயங்கும் 

அசுணம் என்பது ஒரு விலங்கு 
அது யாழிசையில் மயங்கும்
அதனை வேட்டையாடுவோர் யாழை மீட்டுவர் 
அது அந்த இசையைத் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருக்கும்போது பிடித்துக்கொள்வர் 
இந்த விலங்கு இக்காலத்தில் இல்லை

மூங்கில் புதரில் இருக்கும் கறையான் புற்றை உளியம் கரடி கெண்டும் 
இப்படிப்பட்ட வழியில் அவர் சென்றுவிட்டாரோ 


அசுணம்
வௌவால்
பறக்கும் பறவை
முட்டை இடாமல் குட்டி போடும் விலங்கு

வௌவால் போல
பறவையும், விலங்குமாக இருக்கும் ஒரு வகை உயிரினம் அசுணம்
தொன்மா - டைனோசர் 
விலங்கோ என எண்ணிப் பார்க்கலாம்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.