Monday, 9 July 2018

அதியமான் History in Purananuru 98

முனைத் தெவ்வர் முரண் அவிய

அதியமான் நெடுமான் அஞ்சியை 
ஔவையார்  பாடியது.

  • களிறு - பகைவரைக் குத்திக் குருதி படிந்த கொம்புடன் உன் களிறு செல்வதைக் கண்டவர் தம்மைத் தாக்க வருகிறானோ என்று தம் மதிலின் கதவை அடைத்துக்கொள்கின்றனர்  
  • மா - போரில் பிணங்களை மிதித்து நடந்த கால் குளம்புகள் கறை பட்டிருப்பதைப் பார்த்தவர் தம் வாயிலைக் கவை முள்ளால் அடைத்துக் கொண்டனர் 
  • வேல் - உன் மார்போடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் வேலைக் கண்டவர் தன்மீது பாயந்துவிடுமோ என்று தன் மார்பிலிருக்கும்  தோல் கவசத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டனர்.
  • உன் மற மைந்தர் - மார்பில் காயத் தழும்புடன் வரக் கண்டவர் பிறர்மீது விட்ட குருதியுடன் இருக்கும் தம் அம்புகளை மறைத்துக்கொண்டனர். 
நீயோ,

  • காயம் பட்டவரைப் பேணுபவரைப் போல வெண்சிறு கடுகின் எண்ணெய் மணம் கமழப் புகைத்துக் கொண்டிருப்பவரை எமன் போல ஒன்றும் செய்யாமல் காத்திருந்து சாகடிக்கிறாய். 
நானோ

  • நெல் விளையும் புனல் பாயும் அகன்ற நாடு அழிந்துவிடுமோ என்று இரக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். 



ஐயவி - வெண்சிறு கடுகு

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.