Monday, 9 July 2018

அதியமான் History in Purananuru 97

போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள்

அதியமான் நெடுமான் அஞ்சியை 
ஔவையார்  பாடியது.

  • வாள் - போரிட உரையிலிருந்து எடுக்கப்பட்டது - மாறுபட்டவர் உடலை வெட்டி உரு இழந்து கிடக்கிறது 
  • வேல் - கூர் மழுங்கிக் கிடக்கிறது
  • களிறு - பகைவர் மதில் கதவை உடைத்து கொம்பில் இருந்த தொடி சிதந்து காணப்படுகிறது. 
  • குதிரை - பகைவர் மாலையைக் காலால் பறித்துக் குளம்பு தேய்ந்துள்ளது. 
  • அவன் - தோல் கேடயம் துளை பட்ட மார்போடு காணப்படுகிறான். 

இப்படிப் போர்ப்பயிற்சி உள்ள இவனை எதிர்த்தவர் பிழைத்துப்போவது எப்படி?

நெல் விளையும் உங்கள் நிலம் உமக்கு உரித்தாகல் வேண்டின் அதியமானுக்குத் திறை தந்துவிடுங்கள். 
மறுத்தால் தாங்கிக்கொள்ள மாட்டான் 
போரில் வெல்வான் 
உங்கள் நாட்டைத் தனதாக்கிக் கொள்வான். 

இவ்வளவு சொன்ன பின்னரும் தெளிவடையாவிட்டால், நீங்கள் உங்கள் மனைவியரின் தோளைத் தழுவாமல் போக நேரும்.  


யானைக் கொம்பில் தொடி

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.