Monday, 9 July 2018

அதியமான் மகன் பொகுட்டெழினி History in Purananuru 96

எழினி அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின்

அதியமான் நெடுமான் அஞ்சி மகன் 
பொகுட்டெழினியை 
ஔவையார் பாடியது.

பொகுட்டு என்பது பூமொட்டு
அதியமானின் மகன் பெயர் எழினி
இளமையில் அவனைப் பொகுட்டெழினி என்றனர் 
அது பிற்காலத்திலும் வழங்கலாயிற்று. 

என் தலைவன் அதியமான்
தும்பை சூடிப் போருக்கு எழுபவன்
பகட்டடான மார்பு கொண்டவன்

அவன் மகன் இளையவன்
அவனுக்கு இரண்டு பகை

  1. ஒன்று மகளிர் கண்கள் அவனைத் தாக்குகின்றன 
  2. மற்றறொன்று அவன் செல்லும் ஊரிலுள்ள மக்கள் பகை - விழா இல்லை என்றாலும் உண்ணும் ஊன் சோற்றை உறவினர்களோடு பகிர்ந்துண்டு வாழ்கிறோம். நாம் நீர் உண்ணும் துறையை பொகுட்டெழினியின் யானை வந்து கலக்கிவிடுமோ என்று அவ்வூர் மக்கள் அவன்மீது கொள்ளும் பகை  

இதனால் இவனது உல்லாச வாழ்க்கை கூறப்பட்டது. 


பொகுட்டு யானை
கைமான்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.