Sunday, 8 July 2018

பெருநற்கிள்ளி - போர்வைக்கோ History in Purananuru 84

சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைப் 
பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.

புற்கை = புலால் இல்லாத உணவு = சைவ உணவு

என் தலைவன் புல்லுணவை உண்டாலும் வலிமை மிக்க தோளை உடையவனாக இருக்கிறான்
நான் கட்டுப்பாடு இல்லாமல் வெளியில்தான் இருக்கிறேன். 

என்றாலும் அவன் நினைவால் பசலை பூத்துப் பொன்னிறம் கொண்டுள்ளேன். 

உமணர் விழாக் காலத்தில் உப்பு விற்க வருவர். 
விழா முடிந்ததும் சென்றுவிடுவர். 
விழா முடிந்ததும் விழா நடந்த இடம் வெறிச்சோடிக் கிடக்கும்.
இந்த இடம் உமணர்க்கு அச்சம் தரும் விற்பனைத் துறையாக இருக்கும் 

என் தலைவன் போர்க்களம் சென்றால் அந்த இடத்தை அச்சம் தரும் இடமாகக் கருதுவர். 



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.