Saturday, 7 July 2018

பெருநற்கிள்ளி - போர்வைக்கோ History in Purananuru 82

சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைச் 
சாத்தந்தையார் பாடியது.

பெருநற்கிள்ளியின் போர்வை நாட்டைக் கொள்ள ஒரு போராளி வந்திருக்கிறான். 
பெருநற்கிள்ளி ஆர் புனைத் தெரியல் நெடுந்தகை - ஆத்தி மாலை சூடியவன் 

திருவிழா வந்துவிட்டது 
மழை பெய்துகொண்டிருக்கிறது 
மனைவி குழந்தை பெற்றுவிட்டாள். 
தாழ்ந்த குலத்தில் பிறந்த இழிசினன் அவன் 
திருவிழாவில் பறை முழக்க இழிசினன் செல்ல வேண்டும். 
மழை ஈரத்தில் பச்சைக் குழந்தையுடன் மனைவி தரையில் படுக்க முடியாது.
அவளுக்குக் கட்டில் வேண்டும். 
அவன் கை கட்டில் பின்னும்போது எவ்வாறு விரைந்து செயல்படுமோ அப்படிக் கிள்ளியின் கை விரைந்து திறமையுடன் செயலாற்றுகிறது 
போர் எப்படி முடியும் என்பது தெரிந்ததுதானே!

கிள்ளி வெற்றி பெறுவான் என்று புலவர் குறிப்பால் உணர்த்துகிறார். 

போர்வை - இக்காலப் பெட்டவாத்தலை 


கட்டில் நிணக்கும் இழிசினன் கை
பாடல் - - கட்டில் பின்னும் ஊசியின் விரைவைக் குறிப்பிடுகிறது  

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.