Saturday, 7 July 2018

போர்வைக்கோப் பெருநற்கிள்ளி - ஆமூர் மல்லன் History in Purananuru 80

ஆமூர் மல்லன் மதவலி முருக்கி இருதலை

சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி 
முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது 
அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.

இனிய கள்ளால் பெருமை மிக்க ஊர் முக்காவல் நாட்டு ஆமூர்.
அதன் தலைவன் மல்லன்.
மற்போரில் வல்லவன்.

ஆமூரில் மற்போர்.

மல்லனை எதிர்த்துப் போரிட்டவன் பெருநற்கிள்ளி.
இவன் போர்வை (இக்காலப் பெட்டவாய்த்தலை - பேட்டைவாய்த்தலை -ஓப்பு நோக்குக - குளித்தலை - குளிக்கும் இடம்) என்னும் ஊரின் கோ (கோன் = அரசன், இளவரசன்) 

மல்லன் மதம் (திமிர்) பிடித்த வல்லாளன்.
இவன் வல்லமையைப் பெருநற்கிள்ளி முருக்கிப் பிழிந்தான்.
அப்போது கிள்ளியின் கால்களில் ஒன்று அவன் மார்பினைத் தொட்டுக்கொண்டிருந்தது.
மற்றொரு கால் பின்னே நின்றது.
பின்னே நின்ற கால் தாக்குதலை உதைத்தது.

அப்போது உறையூரை ஆண்ட அரசன் தித்தன். 
பெருநற்கிள்ளி தித்தனின் மகன். 
தித்தன் தன் நாட்டை ஆளும் பொறுப்பினைத் தன் மகன் பெருநற்கிள்ளிக்குக் கொடுக்க விரும்பவில்லை. 
இந்த நிலையை வெளிப்படுத்திப் புலவர் பாடுகிறார் 

பெருநற்கிள்ளி மல்லனை வெற்றி கொள்ளும் நிலையைத் தித்தன் காணவேண்டும்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காணவேண்டும்
பசியோடு தென்னை மரத்தை முரிக்கும் யானை போலப் போரிடுவதைக் காணவேண்டும்.
தென்னை மட்டையின் இரண்டு நுனிகளையும் வளைக்கும் யானை போல, கிள்ளி  மல்லனோடு முன்னும் பின்னும் வளைத்துப் போரிடுவதைக் காணவேண்டும்.

இவ்வாறு புலவர் பாடி, கிள்ளியின் திறமையை வெளிப்படுத்துகிறார்.


மற்போர்
கிள்ளி மல்லனோடு இது போன்று போரிட்டான்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.