Saturday, 7 July 2018

நெடுஞ்செழியன் - தலையாலங்கானம் வென்றவன் History in Purananuru 78

அணங்கு முணங்கு உழுவை விழுமியம் பொருநன் கொண்டி ஒல்லான் கறங்க

பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை 
இடைக்குன்றூர் கிழார் பாடியது.

உடம்பை நீட்டி முருக்கிக்கொண்டு குகையை விட்டு இரை தேட வெளியே வரும் புலி போல நெடுஞ்செழியன் போர்க்களம் வந்துவிட்டான்.
அவன் நெஞ்சின் அகலத்தை மத்திக்காதவர் போரிட வந்திருக்கின்றனர்.

  • போர் முழக்கம் செய்துகொண்டு வருகின்றனர். 
  • விழுமியோம் - என்று  சொல்லிக்கொண்டு வருகின்றனர். 
  • நம்மோடு போராடுபவன் இளையவன் ஆதலால் போரில் நமக்குக் கிடைக்கும் செல்வம் பெரிதாக இருக்கும் - என்று ஏளனமாகச் சொல்லிக்கொண்டு வருகின்றனர். 
இவர்கள் அற்பமான பார்வை உடையவர்கள்
இவர்கள் திரும்பி ஓடுமாறு போரிட்டதோடு விடவில்லை
அவர்களின் மூதாதையர் ஊருக்கும் துரத்திச் சென்று அழித்தான்.
அவர்களின் மனைவிமார் தம் கணவரின் தோல்வி கண்டு நாணுமாறு அழித்தான்.
கிணை முழக்கத்துடன் சென்று அழித்தான்.


உழுவை முணங்கு நிமிர்த்தல்
புலி உடலில் நெட்டி முரித்தல்
இப்படி நெட்டி முரித்துக்கொண்டு புலி இரை தேடப் புறப்படுவது போல
நெடுஞ்செழியன் எழுந்து போருக்குப் புறப்பட்டான்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.