Saturday, 7 July 2018

நெடுஞ்செழியன் - தலையாலங்கானம் வென்றவன் History in Purananuru 77

குடுமி பவர் (=கொடி) கொடிஞ்சி மகிந்தன்று மள்ளர்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

நெடுஞ்செழியன்  மிகவும் இளையவன்

  • காலில் அணிந்திருந்த கிண்கிணியைக் கழற்றிவிட்டு அன்றுதான் வீரக்கழல் அணிந்துகொண்டான். 
  • நெற்றியில் குடுமியைக் களைந்துவிட்டு வேப்பம்பூ, உழிஞைப்பூ மாலைகளை அணிந்துகொண்டான் 
  • கையிலிருந்த தொடிவளையலைக் களைந்துவிட்டு வில்லை ஏந்தியிருக்கிறான். 

தேருக்கு அழகு தோன்றும்படி நின்றுகொண்டிருக்கிறான்.
பார்வைக்கு இரக்கம் தோன்றும்படி நிற்கிறான்

  • குழந்தை அணியும் ஐம்படைத் தாலி அவன் கழுத்தில் இன்னும் இருக்கிறது. 
  • பால் குடிப்பதை நிறுத்திவிட்டு இன்றுதான் சோறு தின்றிருக்கிறான் 
அவ்வப்போது பகைவர்கள் இவனைத் தாக்க வருகின்றனர்

  • அவர்களைப் பார்த்து இவன் வியப்படையவில்லை 
  • இழிவாக மதிப்பிடவும் இல்லை 
  • அவர்கள் அழுந்துமாறு அழிக்கிறான் 
  • வானம் முழங்குமாறு அழிக்கிறான் 
  • நிலத்தில் சோர்ந்து விழுமாறு  அழிக்கிறான் 
  • அப்படித் தான் அழிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையவும் இல்லை 
  • பெருமை கொள்ளவும் இல்லை. 

என்னே! இவன் திறமை!


இதுபோல் நெடுஞ்செழியன் நின்றான் என்று கற்கனை செய்துகொள்ளலாமா

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.