Saturday, 7 July 2018

நலங்கிள்ளி - பாட்டு History in Purananuru 73

புலி கழை சிதடன் தாயம்

சோழன் நலங்கிள்ளி பாட்டு.

வஞ்சினம் கூறுகிறான் 

போரிட எண்ணியுள்ள பகைவன் மெதுவாக என்னிடம் வந்து ஈவாயாக என்று கேட்டால் என் முன்னோர் வழியில் எனக்கு வந்த ஆட்சியையும் தருவேன். 
என் உயிரை வேண்டுமானாலும் தருவேன் 

ஆற்றல் மிக்க என்னைப் போற்றாமல் போரிட வந்தால், தூங்கும் புலியைக் காலால் இடறிய குருடன் என்னிடமிருந்து பிழைத்துப் போகமாட்டான். 
கரும்பு மேயும் யானை அதன் முளைகளையும் காலால் மிதிப்பது போல அவனை அழிப்பேன் 

அப்படி நான் போரிடாவிட்டால் 
காதல் கொள்ளாக் கணிகையர் மார்பில் என் மார்பு-மாலை கசங்கட்டும். 


துஞ்சுபுலி இடறிய சிதடன்
தூங்கும் புலியை இடறிய குருடன்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.