Friday, 6 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 68

உடும்ப கடும்பு கேள்வி காவிரி சாவேம் உறந்தையான் நெடுந்தகை

சோழன் நலங்கிள்ளியைக் 
கோவூர் கிழார் பாடியது.

பாணனைப் பாணன் ஆற்றுப்படுத்துகிறான். 

பாண
தோல் உரித்த உடும்பு போன்ற மேனியுடன் காணப்படுகிறாய். 
உன் பசியைப் போக்க யாழை மீட்டி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்.  

அங்கே பெருமை மிக்க நலங்கிள்ளி இருக்கிறான். 

  • அழகிய பகட்டான மார்பினை உடையவன் 
  • அதில் பூண் அணிந்திருப்பான்
  • அதில் சிவந்த சந்தன வரிகள் இருக்கும்
  • மகளிர்க்கு வணங்கும் மென்மை உள்ளம் கொண்டவன் 
  • ஆண்களைக் கவரும் அழகு கொண்டவன் 
  • குழந்தைக்குப் பால் சுரக்கும் தாயின் முலை போல் நீர் சுரக்கும் காவிரி நாட்டை உடையவன்  
  • மரத்தைச் சாய்த்துக்கொண்டு பாயும் வெள்ளம் வரும் காவிரி நாட்டை உடையவன் 
  • காவிரி மண்ணை வளமாக்குவது போல இவன் மக்களை வளமாக்கிக் கொண்டிருக்கிறான் 

உட்பகை காரணமாக இவன் போர் வேண்டாம் என்கிறான் 

  • போருக்கு அனுப்பாததால் "சாவோம்" என்று அவனது போர் மறவர்கள் தம் தோளைத் தட்டிக்கொண்டிருக்கின்றனர் 
  • "போர் தணியவேண்டும்" என்ற பறையொலி கேட்டுக் கை நடுங்கும் அவர்கள் தம் கையில் ஊற்றிய கள்ளைப் பருகாமல் ஒழுக விட்டுக்கொண்டிருக்கின்றனர் 
  • அந்தக் கள் நிலத்தைச் சேறாக்கிக் கொண்டிருக்கிறது 
  • அந்தச் சேற்றில் படுத்துப் புரளும் யானை நகரத்தில் போர் முரசின் முழக்கம் வருமா என்று உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறது 
இப்படி அவன் உறையூரில் இருக்கிறான்.
அவனிடம் சென்றால் பிறரிடம் செல்லவேண்டாத அளவுக்கு வாரி வழங்குவான்.
செல்க.
பெறுக.


உரித்த உடும்பின் எலும்புக் கூடு
பாணன் உடம்பு இப்படி இருந்ததாம்

உடும்பு
மனிதன் எலும்புக் கூடு

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.