Friday, 6 July 2018

பெருஞ்சேரலாதன் - கரிகாலன் History in Purananuru 65

கரிகாலன் பெருவளத்தான் முழா குழிசி ஓதை அகலுள் வடக்கிருந்தனன்

சேரமான் பெருஞ்சேரலாதன் 
சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, 
புறப் புண் நாணி, 
வடக்கிருந்தானைக் 
கழாத்தலையார் பாடியது.

  • வாள் வடக்கிருத்தல் - வாளை வடதிசையில் தலைகீழாகக் குத்தி நிறுத்தி, தான் அதனைப் பார்த்து வடக்கு முகமாக அமர்ந்துகொண்டு "போரிடமாட்டேன்" என்னும் மனவுறுதியுடன் உண்ணாமல் இருந்து உயிர் துறத்தல்
முழவு முழங்கவில்லை
யாழ் இசைக்கவில்லை
சோற்றுப் பானையில் ஊன் உணவு இல்லை
சுற்றத்தார் தேறல் பருகவில்லை
உழும் உழவர் பாட்டுப் பாடவில்லை
தெருவில் விழாக்கோலம் இல்லை
முழுநிலா நாளில் ஞாயிறும் திங்களும் ஒன்று தோன்ற மற்றொன்று மலையில் மறைவது போன்ற நிலைமை சேரனுக்கும் சோழனுக்கும் நேர்ந்தது

சேரன் மறத்தகை மன்னன்
அவனைப் போன்ற மன்னன் சோழன்
சோழன் தன் வலிமையை வெளிப்பபடுத்த வேலை வீசினான்.
சுழன்று போரிடும்போது சேரன் முதுகில் காயம்
சேரன் தன் முதுகில் காயம் பட்டதற்கு நாணினான்
சேரன் போரிடாமல் தன் வாளை வடக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அமர்ந்தான்.
உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்டான்.

புலவர் சொல்கிறார்
இந்தப் பகல் வேளை நமக்குப் பகல்வேளை அன்று.
இருண்ட நாள்.


இது கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த காட்சி
நினைவுக்காக இந்தப் படம் இங்கு வைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.