Friday, 6 July 2018

நெடுஞ்சேரலாதன் (குடக்கோ) - பெருவிறல் கிள்ளி (வேல்பஃறடக்கை) History in Purananuru 62

தார் அமர் அனந்தல் அறத்தின் மண்டல் துளங்கின பைஞ்ஞிலம் 

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், 
சோழன் வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், பஃறடக்கை
போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் (போர்ப்புறம் - இக்காலப் பெட்டவாய்த்தலை)
கழாத்தலையார் பாடியது.

வரும் படையை எதிர்த்துப் போராடுவது இனி எப்படி முடியும்?

போரிட்ட மறவரின் குருதியைப் பூசிக்கொண்டு பேய்ப் பெண்கள் அனந்தல் பறை (ஒப்பாரி) முழக்குகின்றனர்.

படைகளைப் பருந்துகள் உண்கின்றன.

இறுதியில் இரு பெரு வேந்தர்களும் தனித்து அறப்பார் செய்தனர் (அறத்தின் மண்டல்) - மாண்டனர் - அவர்களின் வெண்கொற்றக் குடைகளும், முரசுகளும் வீழ்ந்து கிடக்கின்றன

போரிடுவதற்குப் பாசறையில் யாரும் இல்லை.

இறந்தவர்களின் மனைவியரும் கைம்மை நோன்பு மேற்கொள்ளவில்லை.
போர்க்களத்தில் இறந்தவர்களை அணைத்துக்கொண்டு அவர்களுடன் மாண்டுபோயினர்

  • கைம்மை நோன்பு
  • பச்சிலைகளைத் தின்றுகொண்டு வாழ்தல்
  • குளிர்ந்த நீரிலும் குளிப்பதில்லை 

எல்லாருக்கும் வானுலகம் 
வானுலகில் விருந்து 

  • வானுலகினர்
  • வாடாத பூ சூடியவர்
  • இமைக்காத கண்பார்வை கொண்டவர் 
  • பலி கொடுக்கும் நாற்ற உணவினை உண்பவர்கள் 

இருவர் புகழும் ஓங்கட்டும். 


போர் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.