Friday, 6 July 2018

நலங்கிள்ளி சேட்சென்னி, இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன் History in Purananuru 61

கூழை கடைசியர் செறு பழனம் கண்ணுறை விசிப்ப பெண்ணை எஃகு மலைந்தோர் காண்டல்

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் 
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

அவன் இயல்தேர்ச் சென்னி

அவன் நாட்டுக் கடைசியர் - மண்ணைக் கடையும் உழத்தியர் 

  • கூழைக்கொண்டை போட்டிருப்பர் 
  • அதில் தழைகளைப் பூவாகச் சூடியிருப்பர் 
  • வயலில் விளைச்சலின் ஊடே முளைத்திருக்கும் நெய்தல், ஆம்பல் பூக்களைக் களைந்து எறிவர் 
  • அப்போது வயலில் துள்ளும் வாளை மீனைக் கொண்டுவந்து துண்டுகளாக நறுக்கிச் சமைத்து நெல்லஞ்சோற்றுக்குக் கண்ணுறையாக, (ஊறுகாய் போல்) தருவர்.   

உழவர் 

  • கடைசியர் இட்ட சோற்றை விலாப் புடைக்க உண்டதனால் நெல்லுக் கட்டுகளைத் தூக்கிக்கொண்டு வரும்போது உழவர் நடை தள்ளாடுவர். 
உழவர் சிறுவர்

  • நெல் அறுக்கும் தொழிலாளிகளின் சிறுவர்கள் தேங்காயைப் பறித்துத் தின்னுவர். 
  • தேங்காய் திகட்டிவிட்டால் தந்தையர் போட்ட வைக்கோல் போரின்மீது ஏறித் துள்ளிக் குதித்துப் பனம்பழத்தைப் பறிக்க முயல்வர்.   

இப்படிப்பட்ட வளம் மிக்க நாட்டின் தலைவன் இந்தச் சேட்சென்னி. 
இவன் கையில் வேல் வைத்திருப்பான்
தேரில் செல்வான்
கல் போன்ற தோளை உடையவன்

இவனோடு போராடுபவர் இருந்தால் அவருக்குத் தான் பட்ட பாடு தெரியும்
இவனோடு போரிட்டவர் வாழ்ந்ததை நான் பார்த்தது இல்லை
இவன் காலடியை வணங்கியவர் வருந்தக் கண்டதும் இல்லை.



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.