Thursday, 5 July 2018

பெருந்திருமாவளவன், குராப்பள்ளித் துஞ்சியவன் History in Purananuru 60

முந்நீர் திமில் உவவுமதி கட்சி ஆரை சாக்காடு ஆழ்ச்சி

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை 
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

வளவ!
கடல் உப்பை  மலைநாட்டுக்குக் கொண்டு செல்லும் வண்டிச் சக்கரம் மணலில் அழுந்தியதைப் போக்க வலிமையாக இழுக்கும் எருது போல வெற்றி கண்ட வேந்தன் நீ.

மயில் கூட்டம் போலச் சென்றுகொண்டிருந்த விறலியரும் நானும்
இரவில் கடலில் மீன் பிடிக்கும் படகுகளில் தோன்றும் சுடர் விளக்குகள் போல வானத்தில் செம்மீன்கள் இமைக்க, நடுவில் தோன்றும் நிலாவைப் பார்த்துத் தொழுதோம்.

ஏன் தெரியுமா

வெயிலை மறைக்கும் குடை போல 
நாட்டில் வெம்மை இல்லாதபடி 
ஆட்சி-நிழல் தரும் உன் வெண்கொற்றக் குடை போல 
நிலா எங்களுக்குத் தெரிந்ததால் தொழுதோம். 


பகலில் மீன்-பிடி படகுகள்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.