Thursday, 5 July 2018

பெருந்திருமாவளவன், குராப்பள்ளித் துஞ்சியவன் - பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன் History in Purananuru 58

கோளி ஆலம் வீழ் துளங்கல் பஞ்சவர் உறந்தை பொருநன் ஒர்ருவீர் அலமரும்

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும்
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், 
ஒருங்கு இருந்தாரைக் 
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

நிகழிடம் - உறையூர்
புலவர்  வாழ்த்துகிறார்.

  1. நீ காவிரி நாட்டுக்கு உரியவன் 
  2. இவன் பஞ்சவர் பாண்டிக்காளை - பஞ்சவர் - பாண்டிநாட்டில் ஐந்து பகுதியில் ஆண்ட தலைவர்கள் - தழைத்திருக்கும் ஆலமரத்தை அதன் விழுது தாங்குவது போல - முன்னோர் மறைந்த பின் முதுகுடி மக்களைத் தாங்குபவன் - இளையவன் -  என்றாலும் மின்னல் பாம்பை அழிப்பது போல் பகைவரை அழிப்பவன். 

  1. நீ அறநெறி விளங்கும் உறையூர் அரசன்
  2. இவன் உன் நாட்டில் இருப்பது போல் இருக்கும் நெல்லும் நீரும் எல்லாருக்கும் பொதுவாகக் கிடைக்கும் பொருள் என்று  - பொதியமலைச் சந்தனம், கடல் முத்து, பாண்டிய-முரசு ஆகிய மூன்றும் கொண்டு  ஆளும் கூடல் வேந்தன்.    

  1. பால் நிறமும் பனைக்கொடியும் கொடியும் கொண்ட பலராமனும் 
  2. நீல நிறமும் கையில் சக்கரமும் கொண்ட திருமாலும் 
சேர்ந்து இருப்பது போல உருவம் கொண்டு சேர்ந்து இருக்கிறீர்கள்
பிறர் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள்.
இப்படியே நீங்கள் இருந்தால் இதைக்காட்டிலும் இனிமையான காட்சி வேறு என்ன இருக்கிறது?

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்

உங்கள் புகழ் ஓங்கட்டும்
ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளுங்கள்
இருவரும் ஒன்றுசேர்ந்திருந்தால் உலகம் உங்கள் கைக்குள் வந்துவிடும் என்பது உண்மை.

அதனால்
நல்லவர் போலவும், உதவுபவர் போலவும், தொன்றுதொட்டு நண்பர் போலவும் காட்டிக்கொண்டு தொடர்பேதும்  இல்லாத அரசர்கள் உம் அன்பு நெஞ்சங்களில் புகுவதற்கு வருவர்.
அவர்களின் பேம்போக்கான பேச்சை நம்பிவிடாதீர்கள்.
இன்றுபோல் என்றும் கூடி இருங்கள்
பகையை வென்று உங்கள் வெற்றிவேல் ஓங்கட்டும்
பிறர் குன்றங்களில் புலியும் மீனும் சேர்த்துப் பொறிக்கப்படட்டும்.



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.