Wednesday, 4 July 2018

நலங்கிள்ளி / நெடுங்கிள்ளி History in Purananuru 45



பணை வேம்பு ஆர் நின்ன பொருவோன் வேறல் இகல் 

சோழன் நலங்கிள்ளி உறையூரை முற்றுகை இட்டிருந்தான். 
நெடுங்கிள்ளி கோட்டைக்குள்ளே அடைந்து கிடந்தான்.
இருவருக்கும் புலவர் கோவூர் கிழார் அறிவுரை கூறும் பாடல் 

நீயோ, உன்னோடு போரிடுபவனோ பனம்பூ அணிந்த சேரன் அல்லன். 
வேப்பம்பூ அணிந்த பாண்டியனும் அல்லன். 
இருவரும் ஆத்திமாலை சூடியவர்கள் 
உங்களில் யார் தோற்றாலும் தோற்பது உங்களின் சோழர் குடிதான்.. 
போரில் இருவரும் வெற்றி பெற முடியாது. 
எனவே நீங்கள் போராடுவது உங்கள் சோழர் குடியை மேம்படுத்த அன்று.  
அதனால் இந்தப் போர் உன்னை ஒத்த பகைவரின் நகைப்புக்கு இடம் துவதாகும். 

இவ்வாறு புலவர் கூறக் கேட்டு  நெடுங்கிள்ளி விட்டுக்கொடுக்க நலங்கிள்ளி உறையூர் அரசன் ஆனான். 



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.