Wednesday, 4 July 2018

நலங்கிள்ளி / மாவளத்தான் - நெடுங்கிள்ளி History in Purananuru 44

தொழுதி கவளம் வெளில் ஒற்றி அறவை மறவை

அவன்
சோழன் நலங்கிள்ளி
அல்லது
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
ஆவூர் முற்றியிருந்த காலத்து
அடைத்து இருந்த
நெடுங்கிள்ளி
அரசனுக்கு அறிவுரை கூறி,
கோவூர் கிழார் பாடியது.

ஆவூரில் அடைந்து கிடந்த அரசனின்
  • போர்யானை நீராடவில்லை, உணவு பெறவில்லை, கையை நிலத்தில் வைத்துக்கொண்டு பசியால் புறள்கிறது. முழங்குகிறது. 
  • பால் இல்லாமல் குழந்தைகள் அழுகின்றன 
  • மகளிர் தலையில் பூ சூடாமல் வெறுந்தலையை முடிந்துகொள்கின்றனர்.
  • குடிக்க நீர் இல்லாமல் அழும் ஒலி கேட்கிறது 
இப்படி இருக்கும்போது கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு நீ உள்ளே இருத்தல் கொடுமை.
குதிரை வீரனே
அறவழியைப் பின்பற்றினால் கோட்டையை நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறு.
மறவழியைப் பின்பற்றினால் போரிட்டுக்கொண்டு கதவைத் திற
இரண்டுமில்லாமல் கோட்டைக்குள் அடைந்து கிடத்தல் நாணத்தக்க செயல்.

இவ்வாறு புலவர் கூறக்கேட்ட நெடுங்கிள்ளி போரிடாமலேயே வெளியேறி உறையூர்க் கோட்டைக்கு வந்துவிட்டான்.
இங்கும் அறிவுரை - வேறொரு பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.