Wednesday, 4 July 2018

கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன் History in Purananuru 42

ஆனா ஈகை அண்ணல் தலைப்பனிக்கும் புதுவதோ தீர்ந்தன்று பூசல் புறங்காக்கும்  இழிதரும்  கணிச்சி 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 
புலவர்கள் கொடை வேண்டி அவனை நோக்கியபோது
அவன் மாற்றார் மண்ணை நோக்கினான் என்று
இடைக்காடனார் பாடியது.

வளவ
உன் யானை மலை போலத் தோன்றுகிறது.
உன் படை கடல் போல முழங்குகிறது
வேல் மின்னல் போல் ஒளிர்கிறது
உன்னைக் கண்ணடு அரசர்கள்  நடுங்குகின்றனர்.
உன் நாட்டில் காவிரி ஆற்று நீர்  மோதுதல் அல்லது பகைவர் மோதல் இல்லை.
புலி தன்  குட்டியைக் காப்பாற்றுவது போல உன் நாட்டு மக்களை நீ காப்பாறுகிறாய்.

  • நிறைந்த வருவாய் 
  • நெல் அறுப்பவர்களுக்கு மடையில் கிடைக்கும் வாளைமீன் 
  • உழும் உழவர் கலப்பையில் புரண்டு கிடைக்கும் ஆமை 
  • கரும்பு வெட்டுவோருக்குக் கிடைக்கும் கரும்பில் தொடுத்திருக்கும் தேன் 
  • ஆற்றுப் பெருந்துறையில் மகளிர் விருந்தினரை வரவேற்கப் பறித்த குவளை 
ஆகியவற்றால் வறண்ட நிலப்பகுதியிலிருந்து வரும் மக்களுக்கு விருந்தாகப் படைக்கும்  மென்புல மக்கள் வாழும் நாட்டை உடையவன் நீ.

புலவர்கள் உன்னை நோக்கிப் பாட வருகிஇன்றனர்.
நீயோ பிறர் மண்ணை வெல்லப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.


கரும்பில் தேன்கூடு

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.