Tuesday, 3 July 2018

கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன் History in Purananuru 41

உற்கம் உற்கவும் கனலி துற்றவும் கனவு நனவு காழகம் முத்தி பைதல்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 
போர் பற்றிக் 
கோவூர் கிழார் பாடியது.

எமனும் காலம் பார்த்துதான் கொல்வான். நீ போர் தொடுக்கக் காலம் பார்ப்பதில்லை.
பகை நாட்டில் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன.
  • நான்கு திசைகளும் இருள்கின்றன 
  • இலை இல்லாத மரம் தீ பற்றி எரிகிறது 
  • சூரியன் ஒளி இழந்துவிட்டது 
  • கோடடான் போன்ற பறவைகள் அஞ்சுமாறு கூவுகின்றன 
  • வாயிலுள்ள பல் தானே கழன்று விழுகிறது 
  • தலையில் எண்ணேய் வழிகிறது 
  • யானை மிதிக்க வருகிறது 
  • யானை அங்குசத்தக்குக் கட்டுப்படவில்லை 
  • வெள்ளியால் செய்யப்பட்ட அரசன் செங்கோல் அரசனின் அரியணையோடு கவிழ்கிறது 
இப்படிக் என்றும் காணாக் கனவுக் காட்சிகளைக் கண்டு பகைநாட்டு மக்கள் நனவிலும் நடுங்குகின்றனர். 
தன் மகனுக்கு முத்தம் கொடுத்து, தன் துக்கம் தன் மனைவிக்குத் தெரியாமல் மறைத்துக் கலங்குகின்றனர். 
நீயோ காட்டுத்தீ போலப் படை நடத்திக்கொண்டு செல்கிறாய். 
இது வேண்டுமா?


கனவு

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.