Tuesday, 3 July 2018

கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன் History in Purananuru 38

நுடங்கும் விறல் உடன்று நயந்து ஆற்றலை செய்வினை கடவது கையறவு 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்  
'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு 
ஆவூர் மூலங்கிழார் பாடியது.

உன் படை வானைத் துடைக்கும் கொடியுடன் செல்கிறது. 
நீ சினந்து பார்த்த இடம் எரிகிறது.
நயந்து பார்க்கும் இடம் பொன் பூக்கிறது
சூரியனில் நிலவொளியையும், நிலாவில் வெயிலையும் கொண்டுவரும்  ஆற்றல் உனக்கு உண்டு.
உன் நிழலில் பிறந்து உன் நிழலில் வாழும் எனக்கென்று என்ன இருக்கிறது
நண்பர் செய்யும் செயலால் கிடைப்பர்
உடையவர் கொடுப்பதும்,  இல்லாதவர் கேட்பதும் கடமை அன்று இரக்கப் பண்பு
பகைவரும் உன் நாட்டை விரும்புவர். 

புறநானூறு 38


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.