Tuesday, 3 July 2018

கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன் History in Purananuru 36

அடுநை விடுநை அறிதி கழங்கு ஆன்பொருநை பொருநை நவியம் கடிமரம் மலைத்தனை தகவு

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 
கருவூர் முற்றியிருந்தானை 
ஆலத்தூர் கிழார் பாடியது.

போரிட்டுச் சேரனை அழித்தால்தான் என்ன
போரைக் கைவிட்டால்தான் என்ன

உன் போர் வீரர்கள் சேரனின் காவல் மரத்தை வெட்டுகின்றனர்
வெட்டும் ஒலியைக் கேட்டுக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகக் கோட்டைக்குள்ளாகவே சேரன் அடைந்து கிடக்கிறான்.
இப்படிப்பட்டவனை எதிர்த்துப் போரிடுகிறாய் என்பது  நாணவேண்டிய செயல்.

வளையலும் சிலம்பும் ஒலிக்கும்படி மகளிர் தெற்றி விளையாடும் தண்ணான் பொருநை ஆற்றங்கரையில் காவல் மரத்தை  வெட்டினர்
கொல்லன் அரத்தால் தீட்டிக் கூர்மையாக்கிய கோடாலியால் வெட்டினர்.


தெற்றி விளையாட்டு

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.