Tuesday, 3 July 2018

கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன் History in Purananuru 35

தமிழ்க்கிழவர் மூவர் கனலி வெள்ளி காவிரி கவர்பு அத்தை நினவ எனவ முறை உறை கொண்மூ பறந்தலை பகடு புரந்தருநர் புரந்தருகுவை

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
வெள்ளைக்குடி நாகனார் 
படலைக் கேட்டு அவன் தரவேண்டிய நிலவரியைத் தள்ளுபடி செய்தது


தமிழ்க்கிழவர் மூவருள்ளும் அரசு என்று என்று போற்றப்படுவது உன்னுடையதே. 
சூரியன் எங்கு உதித்தாலும், வெள்ளி சூரியனுக்குத் தெற்கில் தோன்றினாலும் காவிரியில் நீர் வரவது தவறாதது போல நாடு என்ற போற்றப்படுவது உன்னுடைய நாடுதான்.
உனக்கு ஒன்று கூறுகிறேன், கேள். 
உன் மக்கள் முறை வேண்டும்போது உன்னை எளிதாகக் கண்டு முறை பெறுகின்றனர் 
மழை நாட்டில் வேண்டும்போது பொழிகிறது. 
உன் வெண்கொற்றக் குடை உன்மேல் படும் வெயிலை மறைப்பதற்காக அன்று. 
குடிமக்களுக்கு நிழல் தருவற்காகவே. 

கூர்வேல் வளவ!

உன் போர்ப்படை உனக்குத் தந்த வெற்றி உழவரின் உழுபடை தந்த வெற்றி 
மழை பெய்யாவிட்டாலும், வருவாய் குறைந்தாலும் 
இயல்பு அல்லாதன தோன்றினாலும்
உலகம் அரசனைத்தான் பழிக்கும். 

இதனை உணர்ந்துகொண்டு, உன்னைச் சேர்ந்தவர்கள் பொதுவாக ஏதோ கூறுவதைக் கேட்காமல்,
ஏறு பூட்டி உழும் உழவர் பாராத்தை நீ சுமந்துகொண்டால்,
பகைவர்கள் தாமே உனக்கு அடங்கி நடப்பர்.

புறநானூறு 35

வெண்கொற்றக் குடை

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.