Monday, 2 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 33

வட்டி தசும்பு உகந்தனர் தென்னம் பொருப்பன் ஏழெயில் கதவம் உழுவை வஞ்சி தைஇய அல்லிப்பாவை மை

சோழன் நலங்கிள்ளி
வெற்றியைக் 
கோவூர் கிழார் பாடியது.

வேடன் தரும் மான் கறிக்காக உழத்தியர் குளத்துப் பாய்ச்சலில் விளைந்த நெல்லை முகந்து தரும் நாடு பொதியமலை அரசன் தென்னன் நாடு 

இந்த நாட்டில் "ஏழெயில் கதவம்" என்னும் கோட்டை இருந்தது. இதனை வென்ற நலங்கிள்ளி தன் புலிச் சின்னத்தை அந்தக் கோட்டைக் கதவில் பொறித்தான். இத்தகைய ஆற்றல்  மிக்கவன் நலங்கிள்ளி. 

இவனது வஞ்சிப்போர் வெற்றியைப் பாசறையில் பாடியவர்களுக்குத் தைத்த தேக்கிலையில் கறியும் சோறும் பந்து போல் உருட்டி வழங்கினான். 

பாவைக் கூத்தில் அல்லிப்பாவை ஆடுவது போல, தனிமையில் காதலர் ஆடும் மாடங்களில் வெள்ளாட்டுக்கறியைச் சமைத்தளித்துப் பலமுறை விழா கொண்டாடினான். 

இப்படிப்பட செம்மல் அவன். 


இப்படித் தைத்த இலையில் கறிச்சோற்று உருண்டை வழங்கும்
விழா பல கொண்டாடினான்

சோழரின் புலிச்சின்னம்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.