Monday, 2 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 30

மண்டிலம் பரிப்பு காயம் கவுள் எறிகல் துப்பினை செறிவினை புகார் 

நலங்கிள்ளி
சோழனின் திறம் பற்றி  
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

சூரியன் செல்வது
சூரியன் தன் சுழல்-ஈர்ப்பு விசையால் கோள்கள் முதலானவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பது
அனைத்தையும் தாங்கிக்கொண்டிரும் வான்-மண்டலம்
வான்மண்டலத்தில் திரியும் காற்று
காற்று திரியும் திசைகள்
இவை ஏதும் இல்லாத ஆகாயம்

இவை இக்கால அறிவியல் விளக்கம் போல அமைந்துள்ளன. 

செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்று இவை

இவை அனைத்தையும் அளந்து அறிந்தவர் போல
உலகம் இவ்வளவுதான் என்பவர்களும் உள்ளனர்

இவை அனைத்தையும் அறிந்த அறிவாகச் செறித்து வைத்துக்கொண்டிருப்பவன் நீ

யானை தன் காதில் எறிந்த கல்லை நினைவில் வைத்திருப்பது போல மறைத்து வைத்திருக்கும் வலிமை மிக்கவன் நீ

இப்படிப்பட்ட உன்னைப் புலவர்களால் எப்படிப் பாட முடியும்?

கூம்புப் பாய்மரம் இறக்காமல் ஏற்றிய பண்டத்துடன் காவிரி ஆற்றின் வழியே செல்லும் மரக்கலக் கப்பல்  உள்நாட்டில் பண்டங்களை இறக்கும்.

இப்படிப்பட்ட நாட்டை உடையவன் நீ
உன் தகுதிக்கு ஏற்ப நடந்துகொள்.

புறநானூறு 30

செஞ்ஞாயிற்றுப் பரிப்பு 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.