Monday, 2 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 29

அடர் ஐது பாறுமயிர் முற்றுக மடிவு ஆகிலியர் ஓப்புநர் கூவை கோடியர்

நலங்கிள்ளி 
சோழனுக்கு 
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அறிவுரை 

பகலில் பாணர்களுக்குப் பொன்னாலான தாமரை சூட்டுக 
இரவில் மகளிர் தோளைத் தழுவுக 
கொடியவர்களை அடக்குக 
நல்லவர்களுக்கு முரசு முழக்கத்துடன் கொடை வழங்குக 
இவர்கள் உன் சுற்றம் ஆகட்டும் 
நல்லது செய்தால் நன்மை விளையும். தீயவை செய்தால் தீமை விளையும் - என்பதை நம்பாதவர்களோடு சேராதே.
உன் நாட்டில் வயலில் பறவைகளை ஓட்டுபவர் உன் படைவீரர்கள் செல்லும்போது அவர்களுக்கு மீனைச் சுட்டுக் கள்ளுடன் தருவர். பின்னர் தென்னை இளநீரும் தருவர். 
நீ கூரைக் குடிசையில் வாழும் பாணர்கள் வரும்போது அவர்களை நண்பராக்கிக்கொண்டு உதவுக.
நீ பெற்றிருக்கும் இந்த வாழ்க்கை நாடகம் ஆடுவோர் போட்டிருக்கும் வேடம் போன்றது என்பதை உணர்ந்துகொள்.


இளநீர்
சங்க காலத்தில் லழியில் செல்லும் படை வீரர்களுக்கு
உழவர்கள் இளநீர் தருவார்களாம் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.