Monday, 2 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 28

சிதடு கூன் குறள் ஊமு செவிடு மருள் பேதைமை ஊதியம் புறஞ்சிறை புய்த்து 

நலங்கிள்ளி
சோழனுக்கு
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 

அறிவுரை கூறுகிறார் 

ஊமை குருடு செவிடு முதலான உறுப்புக் குறைபாடும், சிதடு, மருள் முதலான மனநலக் குறைபாடுகள் மக்களுக்கு அச்சம் தருவனவே. என்றாலும் அவர்களும் வாழ்கின்றனர். 
வயலில் இரவில் தினைப்புனம் காக்கும் கானவனுக்கு யானை விளைச்சலை அழிக்க வருவதை அங்குள்ள காட்டுச் சேவல் கூவிக் காட்டும். கானவன் எச்சரிக்கையாகச் செயல்படுவான். 
உன் பகைவர்கள் பயிரை அழிக்கும் காட்டு யானை போன்றவர்கள். 
நான் சேவல் போலச் சொல்கிறேன். 
உன் நாட்டில் உள்ளவர்கள் பகைவன் வருவதை எச்சரிக்கக் கரும்பு எய்து காட்டுவர். அந்தக் கரும்பு அம்பு அகழியில் உள்ள தாமரைப் பூவினை அழிக்கும். 
உன்னிடம் இருக்கும் செல்வம் அறம், பொருள் இன்பம் மூன்றும் தர வல்லது. பயன்படுத்திக் கொள்ளாதது உன் பேதைமை. 


குறள்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.