Friday, 27 July 2018

தும்பை History in Purananuru 278

தும்பை - உவகைக் கலுழ்ச்சி

காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

அவள் முதியோள்
அவள் உடம்பில் நரம்புகள் புடைத்துத் தெரிந்தன
காரணம் வறுமை

அவளிடம் சில படைவீரர்கள் வந்தனர்
"உன் மகன் படையைக் கண்டு நடுங்கித் திரும்பிவிட்டான்" என்றனர்

சினம் கொண்டாள்
தன் மகன் படை கண்டு திரும்பியிருப்பான் ஆயின் அவனுக்குப் பாலூட்டிய என் முலையை அறுத்து எறிவேன் - என்று கூறிக்கொண்டு குருதி ஓடும் போர்க்களம் சென்றாள்
போரில் மாண்டுகிடக்கும் பிணங்களைத் தேடிப் பார்த்தாள்
தன் மகன் உடல் சிதைந்து துண்டாகிக் கிடப்பதைப் பார்த்தாள்

அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி கொண்டாள்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி