Thursday, 26 July 2018

கரந்தை History in Purananuru 270

கரந்தை - கையறு நிலை

கழாத்தலையார் பாடியது.


மணப்புகை ஊட்டப்படாத நரைத்த கூந்தலை உடையவளே
சிறுவன் தாயே
பேரில் பெண்டே

மனம் வருந்துகிறேன்
நீயே பார்

இடி போல் முரசு முழங்க, யானைப் படையுடன் போர் புரிந்து, ஆட்சிச் சக்கரம் உருட்டும் வேந்தர்களும் இவனுக்காகப் போர்க்களத்தில்  வேள்வி செய்கின்றனர்

ஆனிரை கவரும் பகைவர் தண்ணுமை முழக்கம் கேட்டதும் உன் மகன் தானே போருக்குச் சென்றான்
ஆனிரை மீட்டான்
அரசன் வேள்வி செய்கிறான்

மரம் வெட்டிய கோடாரி கிடப்பது போல் உன் மகன் வாளுடன் போர்க்களத்தில் கிடக்கிறான்
நீயே பார்
எனக்கே வருத்தமாக இருக்கிறது



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி