Sunday, 1 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 27

தாமரை மரையிலை வலவன் வானவூர்தி கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி வல்லார் வல்லுநர் திங்கள்  புத்தேள் 

சோழன் நலங்கிள்ளி
கொடை வழங்க வேண்டும் என்று
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

உறையூரில் வாழ்ந்த புலவர் உறையூர் அரசன் நலங்கிள்ளிக்கு அறிவுரை வழங்குகிறார். 

தாமரையில் நூற்றுக்கணக்கான இதழ்கள் இருப்பது போல மக்கள் அனைவரும் உயர்திணை என்னும் ஒரே திணையில் பிறந்தவர்கள். 
அவர்களில் புகழுரையும் பாட்டும் பெற்றோர் சிலர் மட்டுமே. 
தாமரை இலை போல மிதக்கும் நீரும் ஒட்டாமல் வாழ்ந்து மறைந்தோர் பலர். 
புலவர் பாடும் புகழுடையோர் தம் செயல் முடிந்ததும் ஓட்டுநர் இல்லாத வானவூர்தியில் வானுலகம் செல்வர். 

சேட்சென்னி மகன் நலங்கிள்ளியே!

தேய்தல், வளர்தல் 
இறத்தல் பிறத்தல் 
இரண்டும் நிகழும் என்பதை நிலா காட்டிக்கொண்டு உலாவுகிறது. 

வல்லமை உடையவர், வல்லமை இல்லாதவர் யாராய் இருந்தாலும் வருந்தி வந்தவர்களுக்கு நீ அருள் புரிவாயாகுக. 

அருள் இல்லாதவர் கொடை வழங்காமல் உன் பகைவர் ஆகட்டும். 


தாமரை
இதில் உள்ள இதழ்கள் ஒரே பிறப்பு
அதுபோல
மக்கள் எல்லாரும் ஒரே பிறப்பு 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.