Sunday, 1 July 2018

நெடுஞ்செழியன், தலையாலங்கானம் வென்றவன் History in Purananuru 26

நளி குட்டம் வளி எஃகு அடுகளம் வேட்டல் நான்மறை நோற்றார் 

பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் 
போர்க்கள வேள்வி பற்றி
மாங்குடி கிழார் பாடியது

கடலில்  காற்றால் செல்லும் கப்பல் போல் 
வாளேந்திய படைகளை உடைய அரசர்களுக்கு இடையே யானைமீது சென்று போர்ப்படைகளை விலக்கினான். 
வேலைக் கையில் எடுத்துக்கொண்டு அரசர்களைத் துவட்டினான். 
அவர்களின் முரசுகளைச் சமைக்கும் பானையாக்கிக்கொண்டான். 
மணிமுடி சூடிய அவர்களின் தலையை அடுப்புக்கல் ஆக்கிக்கொண்டான்.
அங்கு ஓடும் குருதியில் உலை வைத்தான்.
அவர்களின் தோள்களை அகப்பை ஆக்கிக்கொண்டான்.
அவர்களின் உடலை அரிசியாக இட்டு உணவு சமைத்தான்.
இது அடுபோர்ச் செழியனின் அடுகள வேள்வி.

இந்த வெள்விக்கு நான்மறை முதல்வர்கள் சுற்றமாக விளங்கினர் 
மன்னர்கள் ஏவல் செய்தனர். 
இப்படி இவன் வேள்வி செய்வதற்கு பகைவர்கள் நோன்பு செய்திருக்க வேண்டும் 
மாற்றார் என்னும் பெயர் பெற்று முடியாதவர்களாக இவன் வேள்விக்கு உதவியிருக்கிறார்களே, அதனால் இவன் வேள்வியில் இடம் பெற நோன்பு செய்திருக்க வேண்டும். 


போர்க்கள வேள்வி

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.