Sunday, 1 July 2018

நெடுஞ்செழியன், தலையாலங்கானம் வென்றவன் History in Purananuru 24

மாவேள் எவ்வி மிழலை நாரை வேளிர் முத்தூறு தொழுவர் பாயுந்து குரவை தூங்குந்து தூவல் மிலைந்த குரவை முண்டகக் கோதை தலைக்கை தரூஉந்து நிலைஇயர் செலீஇயர் இயர் உந்து பொலங்கலம் விளிந்தோர் 


பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
வெற்றிகளைக் குறிப்பிட்டு
மாங்குடி வாழ்த்துகிறார். 

உழவர் வெயிலுக்குக் கடலில் குளிப்பர் 
கடலில் மீன் பிடிக்கும் பரதவர் சூடான மட்டுச்சாறு பருகிக் குரவை ஆடுவர். 
மைந்தர் புன்னைப் பூ மாலை அணிந்துகொண்டு மகளிருடன் கைகோத்து ஆடுவர்.
இளநீர், கருப்பஞ்சாறு, தாழைப் பதநீர் ஆகிய மூன்றும் சேர்ந்த முந்நீர் உண்டு  முந்நீர்க் கடலில் மகளிர்  பாய்ந்தாடுவர்.
இப்படிப்பட்ட நாடு மிழலை நாடு
இதன் அரசன் கொடை வள்ளல மாவேள் எவ்வி 
இந்த நாட்டை இந்த நெடுஞ்செழியன் கைப்பற்றினான்.
அத்துடன்
தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்த முத்தூறு என்னும் ஊரையும் தனதாக்கிக் கொண்டான்.

இவன் கொடித்தேர்ச் செழியன் எனப் போற்றப்பட்டவன்.

நீ பிறந்த நாள்மீன் துலங்கட்டும் 
உன் பகைவர் பிறந்த நாள்மீன் அழியட்டும். 
மூத்தோரும் 
வாளோரும்
இரவலரும் வாழ்த்த 
மகளிர் மட்டு ஊட்ட மகிழ்த்துண்டு வாழ்வாயாக
என்று புலவர் மாங்குடி கிழார் இவனை வாழ்த்துகிறார். 


முந்நீர்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.