Monday, 23 July 2018

அதியமான் நெடுமான் அஞ்சி History in Purananuru 235

கையறு நிலை

அதியமான் நெடுமான் அஞ்சியை
ஒளவையார் பாடியது.

கள் கொஞ்சம் பெற்றால் எனக்குக் கொடுத்துவிடுவான் 
அதிகமாகப் பெற்றால் நான் கள்ளுண்டு பாடக் கேட்டுக்கொண்டு தான் கள் உண்ணுவான் 
சோறும் அப்படியே 
எலும்பும் தசையும் கிடைத்தால் எனக்கு 
அம்பும் வேலும் நுழையும் இடங்களில் அவன் 
நரந்தம் புல் மணக்கும் தன் கைகளால் புலால் நாற்றமடிக்கும் என் கூந்தலைத் தடவுவான்

அவன்  நெஞ்சில் பாய்ந்த வேல்
பாணர் உணவுண்ணும் மண்டையில் பாய்ந்தது
இரப்போர் கையில் பாய்ந்தது
புரப்போர் இல்லாமல் புலவர் நாக்கில் பாய்ந்தது

எனக்குத் துணையாக இருந்த என் தந்தை இப்போது  எங்கு இருக்கிறானோ
பனித்துறையில் பூத்துக்கிடக்கும் பகன்றை மலர் சூடாமல் அழிவது போலப் போற்றுவார் இல்லாமல் மக்கள் பலர் அழிகின்றனர்


பகன்றை மலர்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி