Sunday, 1 July 2018

நெடுஞ்செழியன், தலையாலங்கானம் வென்றவன் History in Purananuru 23

வெளிறு ஆலங்கானம் பணை முருகன் கூளியர் நவியம் கடிமரம் துளங்கிய நைப்ப நண்ணார் துன்னல் வருவல் வேளை பூளை

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
ஆலங்கானத்தில் போரிட்டது பற்றி,  
கல்லாடனார் பாடியது.

யானை கலக்கிய துறை 
முருகன் சுற்றம் கூளியர் போல உன் படை வேண்டியதை உண்டு, வேண்டாததை வீசிய நிலப்பரப்பு 
கோடாரி வெட்ட விழுந்த மரம் கொண்ட காடு 
மூட்டிய நெருப்பால் வெந்துகிடக்கும் இடம் 

இப்படியெல்லாம் பகை நாட்டைச் சீரழிப்பான் 
யாராலும் நெருங்க முடியாதவன் 
என்று சொல்லும்படி 
நிலம் நெளியப் படை நடத்தி 
ஆலங்கானப் போரில் வென்றான். 

அந்த ஊர் ஆலங்கானம் காடாயிற்று. 
ஆண்மான் கலையைப் புலி அடித்துவிட்டது என்று பெண்மான் தன் குட்டியுடன் பூளை, வேளைப் பூக்களைப் பல்லால் கறிக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத காடு ஆயிற்று  


கலை

புலி அடித்தல்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.