Sunday, 1 July 2018

மாந்தரஞ்சேரல் இரும்பொறை History in Purananuru 22

வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லியோர், அடு பொருந மிஞிறு அயறு பாஅல் குற்று ஆனா உலக்கை புத்தேள் உலகம் 

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் 
குறுங்கோழியூர் கிழார் பாடியது.

பாடலில் 
வேழநோக்கின் விறல் வெஞ்சேஎய் 
எனக் கூறப்பட்டுள்ள தொடர் 
யானைக்கண் சேய் 
என எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

யானை
துளைபட்டுத் தொங்கும் கையை உடையது 
செம்மாந்த நடை கொண்டது 
ஆடி ஒலிக்கும் மணி கொண்டது 
மேல் நோக்கிய கொம்பினை உடையது 
பிறை போன்ற நெற்றி கொண்டது 
சினம் கொண்ட பார்வை கொண்டது 
பரந்த காலடி கொண்டது 
பருத்த கழுத்தை  உடையது  
தேன்கூடு சிதைந்து ஒழுகும் மலை போல வண்டு மொய்க்க மதம் ஒழுகி ஊறும் தலை கொண்டது 
வலிமை மிக்கது 
இளமைத் தன்மை கொண்டது 
கட்டுத்ததறியிலிருந்து நடந்துகொண்டிருப்பது 

யானையின் மேல் வெண்கொற்றக் குடை
வனத்து நிலா போன்ற குடை
மாலை தொங்கும் குடை
இந்தக் குடை நிழலில் மாந்தரஞ்சேரல்

காக்கும் வாள் வீரர்கள் உறங்குகின்றனர் 
நெல்லந் தாளும் கருப்பஞ் சறுகும் இட்டு வேயப்பட்ட கூரை வீடு 
விழாக் கொண்டாடும் களம் போல ஆங்காங்கே தோன்றுகின்றன 
மகளிர் வள்ளைப்பாட்டு பாடிக்கொண்டு நெல் குற்றுகின்றனர் 
தும்பைப் பூவையும், பனங்குருத்துப் பிளவையும் தலையில் செருகிக்கொண்டு தெருவில் குரவை ஆடுகின்றனர் 
அது வேலன் விளையாடும் வெறிக்குரவை ஆட்டம் 

மாந்தரஞ்சேரல் பாசறையில் இருக்கிறான் 
அதன் வாயில்களில் காப்பாளர்கள் இல்லை 
வேந்தர்கள் அவனைப் பணிந்து திறை தருகின்றனர் 
அதனை நண்பர்களுக்கும் சுற்றத்தார்க்கும் வழங்குகிறான் 
இது கொல்லிமலை நாட்டை வெற்றி கண்டதன் பயன் 

அவன் தன் யானை போல் பெருமிதத்துடன் மற்றவர்களைப் பார்க்கிறான்.

புலவர் அவனைப் பார்க்கிறார்
பாராட்டடுகிறார்

பிறர் கேட்காமலேயே கொடுக்கிறானாம்
அவன் நாடு தேவர் உலகம் போன்றதாம்
அவனைக் காண வந்தாராம் 
அவன் படை நடத்தி மக்களுக்குச் சோறு வழங்க வேண்டுமாம்.


வேழத்தின் விறல் நோக்கு
யானையின் பெருமிதப் பார்வை
மாந்தரஞ்சேரல் பார்வை இவ்வாறு இருந்ததாம்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.