Sunday, 1 July 2018

உக்கிரப் பெருவழுதி History in Purananuru 21

வேங்கை மார்பன் புலவரை குண்டு ஞாயில் மிளை எயில் தும்பை

உக்கிரப் பெருவழுதி கானப்பேர் என்னும் ஊரிலிருந்த கோட்டையைக் கைப்பற்றினான். 
இதனை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

பெருவழுதி அறிவுக்கு அடங்காப் புகழை உடையவன். 

கானப்பேர் கோட்டை 
ஆழமான அகழி 
வானளாவிய மதில் 
அதில் விண்மீன்கள் பூத்துக் கிடப்பது போல் ஞாயில்கள்
இருண்ட காவல்-காடு 
சுற்றிலும் பாதுகாப்பாளரைக் கொண்ட சிற்றூர் 
ஆகியவற்றைக் கொண்டது. 

அதன் அரசன் வேங்கை மார்பன். 
உக்கிரப் பெருவழுதி நாட்டை விரிவாக்கும் தும்பைப்பூ சூடிய போரில் ஈடுபட்டான். 
கொல்லன் காய்ச்சிய இரும்பில் பட்ட தண்ணீர் போல் மீட்க முடியாதபடி அழித்தான்.   

இப்படி அழித்த வேல் புகழோடு பூக்கட்டும் என்று புலவர் வாழ்த்துகிறார்.


ஞாயில் புரிசை 

உலைக்கள இரும்பு 


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.