Saturday, 14 July 2018

பேகன் History in Purananuru 141

வையாவிக்கோப் பெரும்பேகனைப் 
பரணர் பாடியது.

கார்மேகம் போன்ற சுற்றத்தார் கூட்டத்துடன் கடுமையான பசியோடு காணப்படும் இரவலனே!

பாணன் பொன்னால் செய்யப்பட்ட தாமரை அணிந்திருக்கிறான் 
விறலி சிறந்த மாலை அணிகலனை அணிந்திருக்கிறாள் 
தேரில் வந்த நீங்கள் தேரை நிறுத்தி அதில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்து மேய விட்டுவிட்டு இளைப்பாஆறிக் கொண்டிருக்கிறீர்கள். 
ஏதோ ஒரு ஊரில் வாழ்பவர் போலக் காணப்படுகிறீர்கள் 
காட்டில் வந்து தங்கியிருக்கிறீர்கள் 
யார் ஐயா நீங்கள் 
என்று வினவ நினைக்கிறீர்கள் 
சொல்கிறேன் கேளுங்கள். 

வெற்றி வேல் தலைவன் பேகன்
அவனைக் காண்பதற்கு முன்பு நாங்களும் உன்னைப்போல்தான் இருந்தோம்.
அவனைக் கண்ட பின் இந்த நிலை அடைந்துள்ளோம்

மயில் உடுத்திக்கொள்ளாது
போர்த்திக் கொள்ளாது 
என்பது தெரிந்திருந்தும் 
மயில் ஆடுவதைப் பார்த்து அது குளிரால் நடுங்குகிறது என்று எண்ணி, தான் போர்த்தியிருந்த போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டவன் பேகன் 
ஆண்யானை மேல் வருபவன் 

கொடுத்தால் அடுத்த பிறவியில் நன்கு வாழலாம் என்னும் எண்ணம் அவனுக்கு இல்லை.
எந்த அளவாவது பிறருக்குக் கொடுத்தல் நன்று என்று எண்ணுபவன்
அவன் கொடைத்தன்மை அப்படிப்பட்டது

நீங்களும் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.