Friday, 13 July 2018

நாஞ்சில் வள்ளுவன் History in Purananuru 138

கலித்தல் - கலிப்பா போலத் துள்ளி விளையாடல்
முதாரி - ஊதாரி போன்ற சொல் - முதியவன்

நாஞ்சில் வள்ளுவனை 
மருதன் இளநாகனார் பாடியது.

காட்டுப் பசுக்கள் துள்ளி விளையாடும் வழித்தடம் 
மான்கள் துள்ளி விளையாடும் மலைப்பகுதி 
மீன்கள் துள்ளி விளையாடும் ஆற்றுத் துறைகள் 
ஆகியவற்றைக் கடந்து வந்திருக்கிறாய். 

முதாரிப் பாண! உன்னிடம் 
மெல்லிசை தரும் சில நரம்புகளை மட்டுமே கொண்ட சீறியாழ்
கிழிந்த உடை
ஆகியவை உள்ளன 

நீயோ வள்ளல் வள்ளுவனின் பெயரைக் கூட நினைக்கவில்லை
என்றாலும் உன் தலைவனாகிய அவன் "பின்னர் வா" என்று சொல்லி அனுப்ப மாட்டான்.
அவன் மனைவியும் அப்படி
தினை விளைந்திருக்கும் வயலில் கதிர்களைக் கவ்விக்கொண்டு கிளிகள் அங்குள்ள மரங்களில் அமர்ந்திருக்கும்.
அந்தத் தினைக்கதிர்கள் போன்றவன் அவன்.


தினைக்கதிர்
இதனைக் கவ்விக்கொண்டு கிளிகள் மரத்தில்
அமர்ந்திருப்பது போல
நாஞ்சில் வள்ளுவன் கொடையுடன் புலவர் வாழ்கிறாராம் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.