Thursday, 12 July 2018

ஆய் History in Purananuru 129

ஆய் அண்டிரன் குறிஇறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

ஆயை 
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

புல்லால் வேய்ந்த கூரையில் இறைவானத்தின் குறிப்பிட்ட பகுதியில் மூங்கில் குழாயில் குறவர் மக்கள் தேனைப் பழுக்க வைத்திருப்பர். அது தேறலாக மாறும். அதனைப் பருகி மகிழ்ந்து வேங்கை மரம் இருக்கும் முற்றத்தில் குரவை ஆட்டம் ஆடுவர். அவர்கள் வாழும் பொதிய மலையில் பலாப்பழம் மிகுதி. 
இதன் அரசன் ஆஅய் அண்டிரன் 
இவன் வீரம் மிக்க போராளி 

நள்ளிருளில் வானத்தில் பூத்திருக்கும் மீன்களை எண்ணினாலும் எண்ணலாம் 
ஆய் அண்டிரன் இரவலர்க்குக் கொடுத்த யானைகள் பெருவெள் (வெள் = வெள்ளம் என்னும் எண்) என்று கூறினால் அது மிகையாகாது, 
"ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெருவெள்ன்னின், பிழையாது மன்னே." 

வெள் என்பது வெள்ளம் என்னும் ஓர் எண்ணைக் குறிக்கும் எண்ணிக்கை. 
தொல்காப்பியம் இதனை 
ஐ அம் பல் என வரூஉம் இறுதி 
அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும். 
புள்ளி மயங்கியல் 98
என்று குறிப்பிடுகிறது. 

தாமரை
வெள்ளம்
ஆம்பல் 

என்பவை அந்த அல்பெயர் எண்கள்.


இருளில் வானத்தில் பூக்கும் மீன்கள்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.