Thursday, 12 July 2018

ஆய் History in Purananuru 128

மன்றப் பலவின் மாச் சினை மந்தி

ஆயை 
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

ஆய் மன்னனைப் பாடிக்கொண்டு அவன் மன்றம் செல்லும் இரவலர் தம் முழவினை முழக்குவர்
பின்னர் அதனை அவன் பொதியமலையில் இருக்கும் பலாக் கிளைகளில் தொங்க விடுவர் 
இரவலர் முழக்கும்போது பார்த்த பெண்குரங்கு அந்த முழவினைப் பலாப்  பழத்தைத் தட்டிப் பார்ப்பது போலத் தட்டும். 
அந்த ஓசையைக் கேட்டு அங்குள்ள நீர்க்கரையில் அன்னச் சேவல் எழுந்து குதித்து ஆடும். 

மழை மேகம் தவழும் இந்தப் பொதியில் நாட்டு அரசன் ஆய் 
இந்த நாட்டில் ஆடிக் காட்டும் மகளிர் தடையின்றிச் செல்வர் 
பெருமை மிக்க மன்னராயினும் யாரும் போரிட நுழைய முடியாது. 

புறநானூறு 128


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.