Thursday, 12 July 2018

காரி History in Purananuru 126

புலன் அழுக்கற்ற அந்தணாளன் கபிலன் பாடினன் முள்ளூர் பொருந பெண்ணை அத்தை  

மலையமான் திருமுடிக் காரியை 
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

பகையரசர் தன் யானை முகத்தில் சூட்டியிருக்கும் ஓடை என்னும் அணிகலனில் இருக்கும் பொன்னைக்கொண்டு தாமரை என்னும் அணிகலன் செய்து பாணர்க்குச் சூட்டும் உரம் பெற்ற பெருமானே (மருமான்) 

நான் வல்லவனோ வல்லவன் அல்லனோ 
உன்னிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 

இருண்ட காவல்காடும் முழங்கும் அருவியும் கொண்ட முள்ளூர் அரசன் (பொருநன்) நீ 

ஐம்புல நெறியிலும் அழுக்கு இல்லாத அந்தணன் கபிலன்.
அவன் உன்னைப் பாடினான்.
பிறர் அழிக்க முடியாத கால்வழியோடு நீ வாழும்படிப் பாடினான்.
புறநானூறு 121122 * 123124 
உன்னிடம் ஏதாவது  பெறவேண்டும் என்று பாட வரும் புலவர்களுக்குப் பாடப் பொருள் இல்லாதவாறு சிறப்பாகப் பாடினான் 

வானவன் குடகடலில் வாணிகத்தால் பொன்னைக் கொண்டுவரும் நாவாய்க்கப்பல் ஓட்டியபோது பிற கப்பல்-கலன்கள் செல்ல முடியவில்லை
"வானவன் குட கடல்,
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, 
பிற கலம் செல்கலாது அனையேம்"
அதுபோல என்னால் பாட முடியவில்லை 
அதனால் உன்னைப் பாட என்னால் வரமுடியவில்லை. 

இப்போது வறுமை என்னை வாட்டுகிறது
உன் புகழ் என்னை அழைக்கிறது
அதனால் வந்தேன்
உன் கொடைத்திறத்தால் ஏதோ பாடுகிறேன்

பாம்பைத் தாக்கும் இடிபோல் முரசு முழங்க யானைப் படையுடன் வந்து தாக்கிய வேந்தனோடு போரிட்டுக் களத்தில் வெல்லும் அரசன் நீ பெண்ணையாறு பாயும் நாட்டின் அரசன் நீ. 


வங்கம்
கலம்
கப்பல்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.