Wednesday, 11 July 2018

பாரி ஆட்சி History in Purananuru 117

மைம்மீன் தூமம் வெள்ளி வெருகு 

பாரி மகளிரைக் கொண்டுபோம் 
கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

வால்மீன் வானத்தில் தோன்றினாலும் 
எரிமீன் விழுந்தாலும்
வெள்ளி-கோள் சூரியனுக்குத் தென்புறத் திசையில் தோன்றினாலும்
மழை பெய்யாது என்று கணித்தறிந்திருந்தனர் 

ஆனால் 
இப்படியெல்லாம் நிகழ்ந்தாலும் 
பாரிமகளிரின் தந்தை நாட்டில் 
முல்லை நில வயலெல்லாம் விளையும் 
புதர்களில் காட்டுப் பூனையின் பற்கள் போல் முல்லைப் பூ மலரும் 
வீட்டு முற்றத்தில் கன்று  போட்டிருக்கும் ஆமான் பசு வயிறார மேயும்படி புல் செழித்திருக்கும். 

காரணம் 
அரசனின் செங்கோல் 
சான்றோர் நிறைவு 


வெருகு
காட்டுப் பூனை
இதன் பல் போல் முல்லைப் பூ தோன்றி மலரும்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.